02 மார்ச் 2010


போர்ச்சின்னமா? இதுயார்கன்னமா?

செந்தமிழர் வடிந்த கண்ணீர்க் குளத்தினதின் நடுவே
செந்தணலாய் வெந்தவரின் சிதைகளின் மேலே
சிதறிப்போன ரத்தச்சதை மலைகுவியல்களின் மேலே-திறப்புவிழா
செய்தசிலை கூறும்… அவர்கள்; போரில்செய்த வதைதனையே.

சொந்தமண்ணில் வாழ்வுகேட்ட செந்தமிழர்களின் வாழ்வை
சேடித்துப் பயங்கரவாதியென முத்திரையும் குத்தி -பலநாடுதனை
கூட்டிவந்து கொன்றொழித்தும் கூட்டியள்ளிச்சென்று முட்கம்பி
கூட்டில் சிறையில் வதைப்பது உலகில் எந்தநாட்டு போர்முறையோ?
ஆட்டம்போட்டு வெற்றிகாணும் ஆரவாரம்தான் இதற்கெதற்கு?
வோட்டுச்சீட்டுகேட்டு தன்னைகூட்டுகின்ற வழியா இந்தக்கணக்கு?

துப்பாக்கி தூக்கவைத்த துர்ப்பாக்கிகள் தாமென்று
தூக்கிப்பிடிக்கின்றார் தம்குற்றத்தை துணிந்து ஏற்கின்றார்
நப்பாசைதான் நம்மண்ணில் நடுகல்லாய் இருப்பதற்கு.
அப்பவேன் எம்மறவர் அமைதியை தூக்கத்தைக் கலைத்தனரோ?
உப்கைத்தின்ற நன்றியும் இல்லாதோர்; சிலர் உடனிருப்பதாலோ?

செந்தமிழர் குருதி வழிந்தோடியதைக் கூறிடவோ-மகிந்தன்
செங்கம்பள விரிப்பில்சென்று திறந்துவைக்கின்றாரோ?
பங்கப்பட்டு பரதவித்த எம்பைந்தமிழர் மனங்கள் படும்பாட்டை
பங்காளிப்பாரதமே !இந்தப்பாவமெல்லாம் சுமப்பாய் நீதானே.

25 பிப்ரவரி 2010

!!!!! அனாதையாய் நான் !!!!!


வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..

இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...

வருந்துவதை தவிர வேறு வழி
இல்லாமல் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..

அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !!

18 பிப்ரவரி 2010


இதுதான் உலகம்

"நன்றி உள்ளவர்கள் சிலர்,
நயவஞ்சகர்கள் பலர்,

பாசமுள்ளவர்கள் சிலர்,
பாசாங்கு செய்வோர் பலர்,

அன்புள்ளவர்கள் சிலர்,
அடக்கு முறை செய்வோர் பலர்,

தித்திப்பாய் பேசுவோர் சிலர்
திட்டுவோர் பலர்,"

உதவ எண்ணமுள்ளோர் சிலர்,
கைவிரிபோர் பலர்,

நம்மை பிடித்தோர் சிலர்,
வெறுப்போர் பலர்,

நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,
எதிர் பார்போர் பலர்,

நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,
பொறாமை கொள்வோர் பலர்..

நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,
மகிழ்ச்சி அடைவோர் பலர்....

உற்று நோக்குவோம் உள்ளத்தை,
உடைத்தெறிவோம் அகந்தையை,

முடிந்த வரை எல்லோருக்கும் நல்லவனாக,
உதவுபவனாக,
வாழ்வோம் நமக்காக...